டக்களசில் இருந்து பிரிந்த சந்திரகுமார் கிளிநொச்சியில் தனிக் கட்சியில் கட்டுப்பணம் செலுத்தினார்

நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலில் கிளிநொச்சியில் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு சுயேட்சையாக தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை இன்று (07) செலுத்தியது.

இன்று மதியம் 12 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினா் மு.சந்திரகுமார் தலைமையில் சுயேட்சை குழுவினர் தங்களது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனா்.

கரைச்சி, பூநகரி, பளை பிரதேச சபைகளுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனா். கட்டுப்பணத்தை செலுத்திய பின்னர் கருத்து தெரிவித்து அமைப்பின் உறுப்பினா்.சுப்பையா மனோகரன்

இந்த உள்ளுராட்சி தேர்தலில் நாங்கள் சுயேட்சையாக கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று பிரதேச சபைகளிலும் போட்டியிடுகின்றோம், தற்போதுள்ள நிலைமைகளின் படி இந்த உள்ளுராட்சி தேர்தலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் தலைமையில் சுயேட்சையாக போட்டியிடுகின்ற எங்களுடைய அமைப்புக்கு அதிக ஆசனங்களை பெற்றுக்கொள்ள கூடிய வாய்ப்புக்களே அதிகம் காணப்படுகிறது.

ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்றவா்கள் மக்களின் பிரச்சினைகளில் அக்கறை செலுத்தாமையினால் ஏமாற்றமடைந்த மக்களுக்கு அவா்கள் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக இந்த தேர்தல் மக்களாக முன்வந்து ஒவ்வொரு வட்டாரங்களிலும் தங்களுக்கான வேட்பாளர்களை வழங்கி ஆதரவளித்து நிற்கின்றாh்கள்.

எனவே கிளிநொச்சியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாh் தலைமையிலான சுயேட்சை குழுவொன்று வருகின்ற உள்ளுராட்சி தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்துவம் என்பதில் எமக்கு அதிக நம்பிக்கை உள்ளது எனத் தெரிவித்தார்.

0Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*