சிக்கித் தடுமாறும் கோதபாய

332
பொது அறிவுப்போட்டி 2018Sltnews

முன்னாள் பாதுகாப்புச் செயலளார் கோதபாய ராஜபக்ஸ நீதிமன்றில் பொய்யுரைத்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சட்ட மா அதிபர் திணைக்களம் இந்தக் குற்றச்சாட்டை நீதிமன்றில் சுமத்தியுள்ளது.

பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தமக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடாது எனக் கோரி கோதபாய ராஜபக்ஸ மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த தடையுத்தரவு நேற்றைய தினம் எதிர்வரும் 15ம் திகதி வரையில் நீதிமன்றில் நீடிக்கப்பட்டிருந்தது. எனினும், நீதிமன்றின் இந்த நடவடிக்கையானது ஒருதலைப்பட்சமானது என சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசுட்டர் ஜெனரல் விராஜ் தயாரட்ன தெரிவித்துள்ளார்.

கோதபாய ராஜபக்ஸ தாம் கைது செய்யப்படுவதனை தடுக்கும் நோக்கில் நீதிமன்றில் பொய்யுரைத்து நீதிமன்றை பிழையாக வழிநடத்தியுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த மனு தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் விளக்கம் கோராமல் நீதிமன்றம் ஒருதலைப்பட்சமாக இடைக்கால தடையுத்தரவினை வழங்கியும் நீடித்தும் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

டி.ஏ ராஜபக்ஸ நினைவுத் தூபி அமைப்பதற்காக பாரியளவு பொதுமக்கள் பணம் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக கோதபாய ராஜபக்ஸ மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.