உடைவைத் தடுக்க செல்­வம் அணி!! சிறி­காந்­தா அணியுடன் சம்­பந்­தன் சம­ரசம்

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் ஒற்று­மைக்­காக எந்த விட்­டுக் கொ­டுப்­புக்­கும் தயார் என்று பங்­கா­ளிக் கட்­சித் தலை­வர்­க­ளி­டம் இலங்­கைத் தமி­ழ­ர­சுக் கட்­சி­யின் முன்­னாள் தலை­வ­ரும், எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தார் என்று அறிய முடி­கின்­றது.

உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் ஆச­னப் பங்­கீடு தொடர்­பாக நேற்­று­முன்­தி­னம் நடந்த சந்­திப்புக் குழப்­பத்­தில் முடிந் தது. அதன்­பின்­னர் தமி­ழ­ர­சுக் கட்­சி­யு­டன் இணைந்து தேர்­தலை எதிர்­கொள்­வ­தில்லை என்று ரெலோ அமைப்பு அறி­வித்­தது.

தமிழ்க் கூட்­ட­மைப்­புக்­குள் எழுந்­துள்ள குழப்ப நிலை­மையை அடுத்து அதன் தலை­வர் இரா.சம்­பந்­தன் சம­ரச முயற்­சி­க­ளில் நேர­டி­யாக இறங்­கி­யுள்­ளார். ரெலோ அமைப்­பின் தலை­வர் செல்­வம் அடைக்­க­ல­நா­த­னு­டன் அவர் அலை­பே­சி­யில் பேசி­னார்.

நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன் இரா.சம்­பந்­த­னின் பிர­தி­நி­தி­யாக செல்­வம் அடைக்­க­ல­நா­த­னைச் சந்­தித்­தார். சந்­திப்­புத் திருப்­தி­க­ர­மாக அமைந்­தது என்று கூறி­யுள்ள எம்.ஏ.சுமந்­தி­ரன், தொடர்ந்து பேச்சு நடத்­தப்­ப­டும் என்று குறிப்­பிட்­டார்.

ரெலோ அமைப்­பின் செய­லா­ளர் ந.சிறி­காந்­தா­வு­ட­னும் இரா.சம்­பந்­தன் அலை­பேசி ஊடா­கப் பேசி­யுள்­ளார். ஆச­னப் பங்­கீட்டு விவ­கா­ரத்­தைப் பேசித் தீர்த்­துக் கொள்­ள­லாம், பேச்சு நடத்­த­லாம் என்று அவர் குறிப்­பிட்­டுள்­ளார். பேச்சு நடத்­து­வ­தற்­குத் தயார் என்று சிறி­காந்­தா­வும் பதி­ல­ளித்­துள்­ளார்.

புளொட் அமைப்­பின் தலை­வர் த.சித்­தார்த்­த­னு­ட­னும் அலை­பேசி ஊடாக இரா.சம்­பந்­தன் தொடர்­பு­கொண்­டுள்­ளார். நடந்த விவ­ரங்­களை கேட்­ட­றிந்து கொண்­டுள்­ளார். பிரச்­சி­னைக்­கு­ரிய உள்­ளூ­ராட்சி மன்­றங்­கள் தொடர்­பா­கத் தமி­ழ­ர­சுக் கட்­சி­யு­டன் பேசு­வேன் என்று குறிப்­பிட்­டுள்­ளார்.

பங்­கா­ளிக் கட்­சி­க­ளு­டன் பேசும்­போது ஒன்­று­மைக்­காக எந்த விட்­டுக் கொடுப்­புக்­கும் தயார். அது தொடர்­பில் தமி­ழ­ர­சுக் கட்­சிக்கு அறி­வு­றுத்­து­வேன் என்று இரா.சம்­பந்­தன் கூறி­னார் என்று அறி­ய­மு­டி­கின்­றது.

0Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*