இலங்கையில் சுனாமி தொடர்பில் வதந்திகள்??

677
பொது அறிவுப்போட்டி 2018Sltnews

நாட்டில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றங்களால் சுனாமி ஏற்படும் என்று மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

பாணந்துறை உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று பரவி வரும் செய்தியில் எந்தவித உண்மை தன்மையும் இல்லை என்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஊடகப்பேச்சாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

சுனாமி எச்சரிக்கை தொடர்பில் பரவி வரும் வதந்தி காரணமாக கடலோர பிரதேசங்களிலுள்ள மக்கள் கடும் அச்சத்துடன் காணப்படுகின்றனர்.

”கடல் சார் பிரதேசங்களில் பூமியதிர்ச்சி ஏற்பட்டால் மாத்திரமே சுனாமி எச்சரிக்கை தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும்.

அவ்வாறான எந்தவித இடர்களும் ஏற்படவில்லை” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவசர இடர் நிலமைகளின் போது இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் உள்ளிட்ட நிறுவனங்கள் தொடர்ச்சியாக மக்களை அறிவுறுத்தி வருகின்றன.

வதந்திகளை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.