கிளிநொச்சி காட்டுப் பகுதியிலுள்ள பெரிய மரங்களில் மர்மக்குறியீடுகள்?

கிளிநொச்சி, அக்கராயன் காட்டுப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் காடுகள் அழிக்கப்பட்டு வருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

நீண்ட பொருங்காட்டு பகுதிக்குள் நுழையும் அடையாளம் தெரியாத கும்பலொன்று அப்பகுதியில் உள்ள பாலை, முதிரை உள்ளிட்ட பெறுமதியான மரங்களை இவ்வாறு அழித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இந்த காட்டு பகுதியிலுள்ள பெரிய மரங்களில் மர்மக்குறியீடுகள் அடையாளப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அத்தோடு குறித்த அடையாளம் தெரியாத கும்பல் அந்த காட்டுப் பகுதியிலயே தங்கி இருக்கும் தடயங்களும் அங்கு காணப்படுவதாக தெரிவிக்கபடுகின்றது.

இவ்வாறு இயற்கைக்கு விரோதாமான செயற்பாடுகள் தொடர்ந்தால் குறித்த மாவட்டம் இயற்கை அனர்த்தங்களுக்கு அதிகளவில் முகம் கொடுக்க வேண்டி வரும் சாத்தியக்கூறு காணப்படுவதாக பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

மேலும், இந்த மாவட்டம் இந்த ஆண்டின் நடுப்பகுதியில் கடும் வறட்சி நிலையை எதிர்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

0Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*