சந்திமால், மத்தியூஸ் இணைப்பாட்டத்தில் படைத்த விசித்திர சாதனை

899
பொது அறிவுப்போட்டி 2018Sltnews

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான டெல்லியில் இடம்பெற்றுவரும் 3 வதும் இறுதியான டெஸ்ட் போட்டியில் மிகச்சிறந்த இணைப்பாட்டம் மூலமாக மத்தியூஸ் ,சந்திமால் ஜோடி புதிய சாதனை ஒன்றை இந்திய மண்ணில் படைத்துள்ளது.

இவ்விருவருமாக 4 வது விக்கெட்டில் பெறுமதியான 181 ஓட்டங்களை பகிர்ந்து இந்திய பந்துவீச்சாளர்களை திணறடித்தனர்.

இந்திய வீரர்கள் தவறவிட்ட பிடியெடுப்புக்களை சாதகமாக பயன்படுத்தி இருவரும் இலங்கையின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்துவதில் அக்கறைகாட்டினார்.

இறுதியில் அஸ்வின் பந்துவீச்சில் மத்தியூஸ் 111 ஓட்டங்களை பெற்றநிலையில் விக்கெட்காப்பாளர் சஹாவிடம் பிடியெடுத்து அட்டமிழந்ததை அடுத்து இந்த இணைப்பாட்டம் பிரிக்கப்பட்டது.

2013 ம் ஆண்டு நாக்பூர் மைதானத்தில் இடம்பெற்ற இந்திய ,இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியில் ஜொனதான் ரோட் மற்றும் இயன் பெல் ஆகியோர் அதிகப்படியான 470 பந்துகளை சந்தித்ததே இந்திய மண்ணில் கடந்த 5 ஆண்டுகளுக்கான சாதனையாகும்.

அந்த சாதனையை நடப்பு டெஸ்ட்டில் 477 பந்துகளை சந்தித்த மத்தியூஸ் , சந்திமால் ஜோடி தகர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.