எமக்கு மூக்கு போனாலும் சரி எதிரிக்கு சகுனம் பிழைக்க வேண்டும்! தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி

548
பொது அறிவுப்போட்டி 2018Sltnews

எமக்கு மூக்கு போனாலும் சரி எதிரிக்கு சகுனம் பிழைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அரசியல் தலைமைகள்தான் தமிழருக்கு விமோச்சனத்தை பெற்றுத்தரப் போகின்றார்களா? என்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பி.பிரசாந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழ்த் தேசியம் பேசிய அரசியல்வாதிகளினால் கைவிடப்பட்டதனை, கரிசனையுடன் முன்னெடுக்கும் கிழக்கு மாகாண ஆளுனரின் அபிவிருத்தி சேவையினை வெகுவாக பாராட்டுவதாக கூறியுள்ளார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கிழக்கு மாகாண மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சிக்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு உட்கட்டமைப்பு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

அதேபோன்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான சி.சந்திரகாந்தனின் சிந்தனையுடன் மேற்கொள்ளப்பட்ட மிகவும் பிரமாண்டமான நூலகமாக மட்டக்களப்பு மாநகர நூலகத்தினை அமைக்கும் முயற்சி 2012 மாகாணசபை கலைக்கப்பட்டது.

நிதி ஒதுக்கீடுகள் தடைப்பட்டு சுமார் 70 மில்லியன் வேலைகள் பூர்த்தி செய்யப்பட்ட நிலையில் மேலும், 220 மில்லியன் நிதித்தேவையுடன் பூரணப்படுத்தப்படாமல் காணப்படுவது மாவட்டத்தினை நேசிக்கும் அனைவருக்கும் வேதனையான விடயம் என்று கூறியுள்ளார்.

“ரணப்படுத்தப்படாத நூலகத்தினை ‘ரணப்படுத்தினால் பிள்ளையானுக்கு நல்ல பெயர் கிடைத்துவிடுமே ‘எமக்கு மூக்கு போனாலும் சரி எதிரிக்கு சகுனம் பிழைக்க வேண்டும்’ என்ற எண்ணம் கொண்ட அரசியல் தலைமைகள் தமிழருக்கு விமோச்சனத்தை எப்படி பெற்றுத்தருவார்கள்.

இளைஞர்களின் கைகளில் ஆயுதங்களைத்திணித்து அவர்களின் சமாதிகளில் அமைக்கப்பட்ட அரியாசனத்தில் அமர்ந்துகொண்டு தமிழ் சமுகத்தை மறந்த அரசியல் தலைமைகள் தங்களால் சிந்திக்க முடியாது.

தேர்தல் காலத்தில் சில அரசியல்வாதிகளின் பேசு பொருளாக மட்டக்களப்பு பொது நூலகம் காணப்பட்டது.

அதை செய்யப்போகின்றோம் இது செய்யப்போகின்றோம் என அறிக்கையில் மாத்திரம் போர் நடத்தியதுடன், அப்படியே நின்று நின்றுவிட்டார்.

ஆனால், கிழக்கு மாகாண ஆளுனர் இந் நூலகத்தினை பூரணப்படுத்துவதற்கு முன் வந்தமையானது மட்டக்களப்பு மாவட்ட கல்வி வலுவாக்கத்திற்கு கிடைத்த சிறந்த உந்து சக்தி எனவும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பி.பிரசாந்தன் குறிப்பிட்டுள்ளார்.