இரணைமடு குளத்தின் அருகில் இருந்த புத்தர் சிலை அகற்றப்பட்டது

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் அருகில் இருந்த சிறிய இராணுவமுகாம் அகற்றப்பட்ட பின்னர், குளத்தின் அருகில் இருந்த புத்தர் சிலையையும் தற்போது அகற்றப்பட்டுள்ளது.

யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர், இரணைமடு குளத்தின் பொறியியலாளர் அலுவலக கட்டடம் இராணுவத்தினர் தங்களின் தேவைக்காகவும் பயன்படுத்தி வந்த நிலையில், குளத்தினை பார்வையிடுவதற்கு பெரும் திரளான சிங்கள மக்கள் வருகை தந்தனர்.

அவர்களின் வழிபாட்டுக்காக அமைக்கப்பட்டதாக கூறப்படும் புத்தர் சிலை தற்போது அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் சுமார் 3000 மில்லியன் நிதியுதவியில் இரணைமடு குளம் தற்போது புனரமைக்கப்பட்டு வருகின்றது.

குளத்தின் பொறியியலாளர் அலுவலகம் மீள் புனரமைப்பு காரணமாக, குறித்த இடத்தில் தங்கியிருந்த இராணுவம் அங்கிருந்து வேறு ஓர்இடத்திற்கு மாற்றப்பட்ட பின்னரும் புத்தர் கோவில் குளத்தின் அருகிலே இருந்தது.

இந்நிலையில், குளத்தின் அபிவிருத்திக்கு இடையூறு ஏற்படும் என்ற காரணத்தால் புத்தர் கோவில் அதே இடத்தில் இருக்க, சிலை மாத்திரம் இராணுவத்திரால் அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*