இந்தியாவுக்கு எதிரான போட்டியில் மூச்சுத்திணறலால் அவதிப்பட்ட இலங்கை வீரர்கள்.

270

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வீரர்கள் மூச்சுத் திணறலால் அவதிப்பட்டுள்ளனர்.

இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி புதுடெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதன்போது ஏற்பட்ட காற்று மாசு காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு இலங்கை அணி வீரர்கள் மூவர் மைதானத்தில் இருந்து வெளியேறியுள்ளனர்.

காற்று மாசு காரணமாக வீரர்கள் சிலர் வாந்தி எடுத்துள்ளனர்.

மூச்சுத்திணறலைத் தவிர்க்க முகமூடி அணிந்து சில வீரர்கள் விளையாடிய போதிலும், லக்மால், லஹிரு கமகே, தனஞ்சய சில்வா மற்றும் ஜெபரி ஆகியோருக்கு ஒக்சிசன் வழங்கப்பட்டுள்ளது.

ஐந்து வைத்தியர்கள் கொண்ட குழு இலங்கை வீரர்களுக்கு சிகிச்சை வழங்கியுள்ளதாக இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் 5 வைத்தியர்கள் இந்த வீரர்களுக்கு சிகிச்சை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இறுதியில் 10 பேருடன் மாத்திரமே இலங்கை அணி விளையாடிய நிலையில், இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி இன்றைய நாள் ஆட்டத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.