பட்டதாரிகள் நியமனத்தில் குளறுபடிகள்!

கிழக்கு மாகாணத்தில் இடம்பெறும் இன உறவை

சீர் குலைப்பதற்குஎதிராக ஐனாதிபதி மற்றும் பிரதமருக்கு தாம் அறிவிக்க உள்ளதாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அகமத் தெரிவித்துள்ளார்.

பட்டதாரிகள் இன்று முதலமைச்சரை அவரது இல்லத்தில் சந்தித்து கலந்திரையாடினர்.

இதன் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்

பட்டதாரிகளிற்கு நியமனம் வழங்கி அவர்களது மனித வளங்களை பயன்படுத்துவதில் கிழக்கு மாகாண சபை தமது தலைமையிலான ஆட்சிக்காலத்தில் முன்னுரிமை அளித்திருந்தது.

சமீபத்தில் வழங்கப்பட்ட பட்டதாரிகளின் நியமனத்திலும் குளறுபடிகள் இடம் பெற்றுள்ளதாக பரவலான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

கிழக்கு மாகாணத்தில் ஐனநாயகத்திற்கு விரோதமான செயல்கள் தற்பொழுது இடம்பெற்று வருகின்றது.

கடந்த இரண்டு மாதங்களாக கிழக்கு மாகாணத்தில் எந்தவொரு அபிவிருத்தியும் இடம்பெறவில்லை.

அனைத்து நடவடிக்கைகளும் முடக்கப்பட்டிருக்கின்றதாக தெரிவித்த நஸீர் அகமத் அவைகள் குறித்து ஐனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்திற்க்கு கொண்டு செல்லவுள்ளதாகவும் தெரிவித்தார்.

7Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*