கிழக்கில் ஹசன் அலி – ரிசாத் கட்சிகள் கூட்டணி

206
பொது அறிவுப்போட்டி 2018Sltnews

உள்ளூராட்சித் தேர்தலில் ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், கிழக்கு மாகாணத்தில், ஹசன் அலி தலைமையிலான ஐக்கிய சமாதான கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளது.

அதேவேளை, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசில் இருந்து பிரிந்து, ஐக்கிய சமாதான கூட்டமைப்பை உருவாக்கியுள்ள ஹசன் அலி, கிழக்கு மாகாணத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தமது கட்சி போட்டியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இணைந்து போட்டியிடுவது குறித்து, சில கட்சிகளுடன் பேச்சுக்களை நடத்தி வருவதாகவும், வரும் நாட்களில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படும் என்றும், அவர் கூறியுள்ளார்.