மாவீரர் துயிலுமில்லங்கள் புனரமைப்பு: சிறீதரன் மீது விசாரணை!

54

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மீது விசாரணை நடத்தப்படவுள்ளதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சர் நிரோசன் பெரேரா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் மூலம் மாவீரர் துயிலும் இல்லங்களைப் புனரமைத்தமை தொடர்பாகவே மேற்படி விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதற்கான நிதியினை கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்குழு ஒதுக்கியுள்ளதுடன், மேற்படி துயிலுமில்லங்களைப் புனரமைப்பதற்கு நான்கு மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக பிரதமரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், இது குறித்த விசாரணைகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் நிரோசன் பெரேரா தெரிவித்துள்ளார்.