இலங்­கையின் கரை­யோ­ரங்­களிற்கு ஆபத்து?

மேற்கு வங்­காள விரி­குடா பகு­தியில் ஏற்­பட்­ட தாழ­முக்கமானது, இலங்­கையின் கரை­யோ­ரங்­க­ளையும், தென்­னிந்­தி­யா­வையும் அதி­க­ளவில் பாதிக்கும் சாத்­தியம் உள்­ள­தா­கவும் கால­நிலை அவ­தான நிலையம் தெரி­வித்­துள்­ளது.

Loading...

இதனால், எதிர்­வரும் வாரங்­களில் மழை­யுடன் கூடிய கால­நிலையால், இடி­யுடன் கூடிய கன­மழையும், கரையோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அதி­க­ரிக்கும் எனவும் கால­நிலை அவ­தான நிலையம் மேலும் தெரி­வித்­துள்­ளது.

மேற்கு வங்­காள விரி­கு­டாவில் ஏற்­பட்­டு­ வரும் தாழ­முக்கம் கார­ண­மாக இலங்கை மற்றும் தென்­னிந்­திய பகு­திகள் அதி­க­ளவில் பாதிக்­கப்­ப­டலாம் எனவும் இலங்­கையில் கரை­யோரப்பகு­திகள் அதிக தாக்­கத்­திற்கு முகங்­கொ­டுக்க நேரி­டலாம் எனவும் எதிர்­வு­ கூ­றப்­ப­டு­கின்­றது.

எனவே நிலவும் காலநிலை குறித்து மக்கள் அவதானமாக இருக்குமாறும், வளிமண்டலவியல் திணைக்கள அறிவுறுத்தல்களை அவதானிக்குமாறும் பொதுமக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*