காலியில் தொடரும் இனவன்முறை! சற்றுமுன்னர் வீடொன்றுக்கு பெற்றோல் குண்டு வீச்சு

Loading...

காலி மாநகரம் அருகே அமைந்துள்ள முஸ்லிம் வீடொன்றின் மீது சற்று முன்னர் பெற்றோல் குண்டொன்று வீசப்பட்டுள்ளது.

காலியின் அருகே அமைந்துள்ள தூவ பிரதேசத்தின் சமகிவத்தை குடியிருப்புப் பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றின் மீதே சற்று முன்னர் பெற்றோல் குண்டு வீசப்பட்டுள்ளது.

கடந்த வௌ்ளிக்கிழமை காலியில் ஏற்பட்ட இன வன்முறைகளைத் தொடர்ந்து அமைதி திரும்பிக் கொண்டிருந்த நிலையில் நடைபெற்றுள்ள இந்தச் சம்பவம் காரணமாக காலி மாவட்டத்தில் மீண்டும் அச்சமான சூழல் தோன்றியுள்ளது.

பெற்றோல் குண்டு சரிவர தீப்பற்ற முன்னர் அணைக்கப்பட்டதன் காரணமாக பாரிய சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தை சுற்றிலும் பாதுகாப்பு வலயம் அமைத்து பொதுமக்களை உட்பிரவேசிக்க விடாமல் தடுத்துள்ள பொலிஸார், விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

119Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*