வியக்க வைத்த இளம் இலங்கை பந்துவீச்சாளர்

மலேசியாவில் நடைபெற்று வரும் 19 வயத்துக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் இலங்கையின் கெவின் கோத்திகோடா வித்யாசமான முறையில் பந்து வீசுவது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மலேசியாவில் 19 வயத்துக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இலங்கை அணியின் சார்பாக அறிமுகமாகியுள்ள கெவின் கோத்திகோடா-வின் பந்து வீச்சு வித்யாசமான முறையில் அமைந்துள்ளது.

இவர் தலையை சுற்றி பந்து வீசும் முறையானது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. வீடியோ வைரலானதை தொடர்ந்து கெவின் பந்து வீச்சு தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வீரர் பால் ஆடம்ஸ் பந்து வீச்சை போன்று இருப்பதாக அனைவரும் வியப்பாக கூறுகின்றனர்.

முரளிதரன், அஜந்தா மெண்டிஸ் போன்ற சுழற்பந்து ஜாம்பவான்களை உருவாக்கிய இலங்கையிலிருந்து உருவாகியிருக்கும் புதிய சுழற்பந்து வீச்சாளரை அனைவரும் வாழ்த்தி வருகின்றனர்.

8Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*