பெற்றோல் தட்டுப்பாட்டின் பின்னணி என்ன?

14
பொது அறிவுப்போட்டி 2018Sltnews

இலங்கையின் பெற்றோல் விநியோகிப்பில் 16% மட்டுமே இந்தியாவின் ஐஓசீ நிறுவனம் விநியோகிக்கிறது.

84% பெற்றோல் விநியோகத்தை இலங்கை பெற்றோலியம் கூட்டத்தாபனமே விநியோகிக்கிறது.

அப்படியானால் இந்தியாவுக்கு சொந்தமான, ஐஓசீ நிறுவனத்துக்கு எண்ணை ஏற்றி வந்த கப்பலில் உள்ள எண்ணை தரமின்மையால், எண்ணை தட்டுப்பாடு உருவாகியதா?

இல்லை என்பதுதான் உண்மை?

சில தினங்களுக்கு முன் இது தொடர்பான அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, ” தரமற்ற எண்ணையை இறக்க, தனக்கு அரசியல்வாதிகளும் , வியாபாரிகளும் அழுத்தம் கொடுக்கிறார்கள்” என கூறியிருந்தார்.

அர்ஜுன ரணதுங்க , முன்னாள் கிரிகெட் வீரர். அங்கே சதம் அடித்தது போல ஊழலிலும் சதம் அடிப்பவர். இவர் கப்பல்துறை அமைச்சராக இருந்து , செய்த ஊழல்களால் , அவரை கப்பல் துறை அமைச்சிலிருந்து , பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சராக்கினார்கள். அப்போதே இன்னொரு இடம் நாசம் என , பரவலான கருத்துகள் வந்தன. இவர் முன்னாள் மகிந்த ஆதரவாளராக இருந்து , மைத்ரியோடு இணைந்தவர்.

இவரை வைத்து மகிந்த தரப்பு , நாட்டில் உள்ள மக்களை , இன்றைய அரசு மீது வெறுப்பை உருவாக்க முனைவதாக ஒரு சிலர் கருத்துகளை வெளியிடுகிறார்கள். மற்றும் சிலர் , இவர் கொமிசன் அடிப்பதற்காக, இப்படி நடந்து கொள்வதாக குற்றம் சாட்டுகிறார்கள். இதின் மறுபுறத்தே இந்திய விரோதம் ஒன்றையும் உருவாக்க சிலர் முனைகிறார்கள்.

இந்த எண்ணைக் கப்பல் ஐஓசீ நிறுவனத்துக்கான எண்ணையை , ரசியாவிலிருந்தே எடுத்து வந்துள்ளது. அந்த எண்ணையை பரிசீலித்த போது அது தரமற்றது என்பதால் , ஏற்க மறுக்கப்பட்டது எனப்படுகிறது.

அதன் பின்னர் அக் கப்பல் கொழும்பிலிருந்து , திருகோணமலைக்கு சென்று கடலில் தரித்து நிற்கிறது.

சாதாரணமாக வந்துள்ள எண்ணை தரமற்ற நிலையில் இருந்தால் , அதை சுத்திகரிக்கும் முறையொன்று உள்ளது. அதாவது அந்தக் கப்பலில் அதற்கான வழி முறை உண்டு. அதில் இல்லாவிடில் சுத்திகரிக்கும் கப்பல் ஒன்றை வரவழைக்க அனுமதியளித்து , அதன் மூலம் சுத்திகரித்து , பரிசீலித்து ஏற்றுக் கொள்ளும் முறை உள்ளது. ஆனால் அப்படி ஒரு கப்பல் வருவதற்கான அனுமதியளிக்கப்படவில்லை என சொல்லப்படுகிறது . ஏன்? யாரால் ?என்பது குறித்து தகவல்கள் இல்லை?

இதுபோன்ற பிரச்சனை மகிந்த காலத்தில் நடந்த போது , சுசில் பிரேமஜந்த அமைச்சராக இருந்தார்.அப்போது அக் கப்பலில் இருந்த எண்ணை சுத்திகரிக்கப்பட்டு இறக்கப்பட்டது. அதனால் அவருக்கு பால தெல் அமைச்சர் எனும் பெயர் வந்தது. அதாவது தரமற்ற எண்ணை அமைச்சர்.

சாதாரணமாகவே , அரச எண்ணைக் குதங்களில் சில காலத்துக்கு தேவையான எண்ணை இருக்கும். ஆனால் எண்ணைக் குதங்கள் போதாது என சிலர் சொல்கிறார்கள்.சில கடந்த வேலை நிறுத்த காலத்தில், செயல்படுத்த முடியாதவாறு செய்யப்பட்டதாகவும் சொல்கிறார்கள். புதிய எண்ணைக் குதங்களை உருவாக்க அரசு முயலவில்லை எனவும் சொல்கிறார்கள். சிலர் மேலதிக எண்ணையை கொண்டு வரும் டென்டரை , கபினட் அனுமதிக்கவில்லை என்றும் சொல்கிறார்கள்.

எது எப்படியோ, இப்போது அவசரமாக எதுவித டென்டரும் இல்லாமல் , அதிக விலை கொடுத்து எண்ணையை கொள்வனவு செய்ய வேண்டிய நிலைக்கு அரசு தள்ளுப்பட்டுள்ளது. இங்கு பெரும் தொகை கமிசன் , சம்பந்தப்பட்ட அமைச்சருக்கும் ,ஈடுபடும் தரப்புக்கும் கிடைக்கும். கடந்த போர் காலத்தில் ஆயுதக் கொள்வனவில், பெரும் தொகை கமிசன் அடிக்க இப்படியான சந்தர்ப்பங்களை உருவாக்கினார்கள். பயன்படுத்தி கமிசன் அடித்தார்கள்.

16% வீத பிரச்சனையை விட, உள்ளே வேறோர் அரசியல் தேவை சதிராடுவதாகவே எண்ணத் தோன்றுகிறது. அதற்குள்ளும் கமிசன்! 2 இன் 1 டைப்!

இருப்பினும் ஒரு எண்ணைக் கப்பல் 10ம் திகதிக்கு முன் வந்துவிடும்.

இது குறித்து மைத்ரி இது குறித்து ஒரு கமிசன் அமைத்து, பிரச்சனையை ஆராய முடிவெடுத்துள்ளார்.

கமிசன் முடிவு வருவதற்கு முன் , கப்பல் வந்திடும்.

கப்பல் வந்ததும், கமிசனும் மறந்திடும்.