ஒளிப்படங்களை வெளியிட்டு மீண்டும் சிக்கித்தவிக்கும் அமலா பால்!

516

அமலாபால் அவரது ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ள ஒளிப்படத்தால் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக பல்வேறு விமர்சனங்களுக்கு முகம் கொடுத்துவரும் அமலா பால், உடல் வலுவூட்டல் நிலையம் (ஜிம்) சென்று அங்கு இருப்பது போன்ற ஒளிப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதைப் பார்த்த சமூக வலையத்தள விமர்சகர்கள் அமலா பாலை சரமாரியாக விமர்சித்து கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

இதில், ‘மேக்கப் இல்லாமல் உங்கள் முகத்தைப் பார்க்க முடியவில்லை’ எனவும் ‘தாகூர் போன்ற பெரிய மகானின் தத்துவத்தை நீங்கள் பயன்படுத்தாதீர்கள்’ என்றும் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.