பாதுகாப்பு அமைச்சரின் கருத்துக்கு முதல்வர் கண்டனம்

6
பொது அறிவுப்போட்டி 2018Sltnews

உண்ணாவிரதத்தில் இறங்கியுள்ள கைதிகளை விடுதலைப் புலிகள் என முத்திரை குத்த அரசு முனைவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

உண்ணாவிரதத்தில் இறங்கியுள்ள கைதிகள் விவகாரத்தை ஆழ்ந்து பரிசீலிக்க வேண்டும் என தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அமைப்பின் தலைவி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கடிதம் மூலம் கேட்டுக்கொண்டுள்ளார்.

அந்தக் கடிதத்தில், உண்ணாவிரதம் இருந்து வரும் கைதிகளை தத்தமது அரசியல் தேவைகளுக்காக விடுதலைப் புலிகள் என முத்திரை குத்தி அவர்களுக்கு தண்டனை பெற்றுத் தர அரசு முனைகிறது என்று குறிப்பிட்டுள்ள முதல்வர், இக்கைதிகள் குறித்த விசாரணைகள் எதுவும் இன்னும் ஆரம்பிக்கப்படாத நிலையிலேயே அவர்களை விடுதலைப் புலிகள் என்று அரச பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜயவர்தன குறிப்பிடுவதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

“கைதிகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று எனக்கு அறியத் தரப்பட்டுள்ளது. எனவே, அவர்கள் மீதான விசாரணைகள் நடைபெற்று முடியும் வரை அவர்கள் குறித்த ஒரு முடிவுக்கு வந்துவிடக்கூடாது” என்றும் முதல்வர் விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.