யாழில் இன்றிரவு திடீர் தீ விபத்து

10

யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் உள்ள தனியார் கட்டடம் ஒன்றில் இன்றிரவு தீ விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. ஆனாலும் குறித்த தீ தற்பொழுது கட்டுப்பாட்டினில் கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள கிளின்ரன் அந்தியகால சேவை நிலையத்திலேயே குறித்த தீ வுபத்துச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பிணப் பெட்டிகளுக்கு பஞ்சாக வைப்பதற்கு பயன்படும் வைக்கோலில் தீ பற்றியதனாலேயே குறித்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக அறியமுடிகிறது.

இன்றிரவு 9.15 மணியளவில் ஏற்பட்ட குறித்த தீ விபத்தினைத்தொடர்ந்து யாழ் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் குறித்த தீப்பரவுகையினை முற்றாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

இதனால் நகரில் ஏனைய வர்த்தக நிலையங்களுக்கும் தீ பரவி ஏற்படவிருந்த பேரனர்த்தம் தடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.