தென்னிலங்கையில் மீண்டும் வான்வெளி மர்மம்; வீட்டுக்கூரையிலிருந்து மீட்பு!

6
பொது அறிவுப்போட்டி 2018Sltnews

ஸ்ரீலங்காவின் தெற்கே மாத்தறை மாவட்டம் திக்வெல்ல, வலஸ்கல, எல்லகப்புகே தோட்டத்திலுள்ள வீடொன்றின் கூரையின்மீது வான்வெளியிலிருந்து வீழ்ந்ததாக சந்தேகிக்கப்படும் மர்மபொருள் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

ஒன்றரை அங்குல நீளமுடைய கறுப்பு நிறப் பொருளே இவ்வாறு மீட்கப்பட்டுள்லது. பொலிஸாருக்கு மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த விண்பொருள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இது என்னவாக இருக்கும் என்ற பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டுக் கூரையில் திடீரென ஏதோ ஒன்று விழுந்துள்ளதைக் கேட்டுச் சந்தேகித்த வீட்டு உரிமையாளர்கள், அது குறித்துச் சோதனையிட்டபோது, அது அசாதாரண தோற்றத்தில் காணப்பட்டுள்லதாக சந்தேகித்தே பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

இதே பகுதியில் கடந்த 18ம் திகதி பாரிய ஒளிச்சத்தத்துடன் மர்மப்பொருள் ஒன்று வீழ்ந்தமையினால் பரபரப்பு ஏற்பட்டிருந்தது. எனினும் அது விண் கல்லாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் மத்தியில் அது சீன நாட்டு விண்வெளி மையத்தின் உடைந்த பாகமாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.