தொடர்ந்து பிச்சையெடுப்பேன்! ரஷ்ய இளைஞர் அதிரடி பதில்

5

ரஷ்யாவைச் சேர்ந்த இளைஞர் எவ்ஜினி பெர்டிகோவ், தனது ஏ.டி.எம் கார்டு லாக் ஆகி விட்டதால், காஞ்சிபுரம் குமரிக்கோட்டம் கோயிலில் கடந்த 10ம் தேதி பிச்சையெடுத்தார்.

அப்பகுதி காவல்துறையினர் அவரை மீது சென்னை ரஷ்ய தூதரகத்திற்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அந்த இளைஞர் ரஷ்ய தூதரகத்திற்கு வரவில்லையென கூறப்படுகிறது.

இந்நிலையில், சென்னை தி.நகரில் உள்ள போக் சாலையில் மற்றொரு சுற்றுலாப்பயணியுடன் அவரைப் பத்திரிகையாளர் ஒருவர் பார்த்துள்ளார்.

அந்த பத்திரிகையாளரிடம் ரஷ்ய இளைஞர் கூறியதாவது, ”எனக்கு ரஷ்ய தூதரக உதவித் தேவையில்லை. ட்ராவல் செய்வது பிடித்துள்ளது. அதற்காக தொடர்ந்து மக்களிடம் பிச்சையெடுப்பேன்.

இப்போது மீடியாக்களில் செய்தி வந்திருப்பதால் என்னைப் பார்த்தால் நிறைய பேர் பேசுகிறார்கள். அவர்களிடம் 100 ரூபாய் நான் கேட்கிறேன்.

இப்போது கொஞ்சம் பணம் சேர்ந்துள்ளது. தொடர்ந்து பிச்சையெடுப்பேன். பெங்களுரு செல்வது என் அடுத்தத் திட்டம்” எனத் தெரிவித்துள்ளார். ரஷ்ய இளைஞரின் பதில் பரப்பினை கிளப்பியுள்ளது.