ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தமிழ் இளைஞனுக்கு மேன்முறையீடு. சட்டத்தரணி செலஸ்டின் தனது சமூக அக்கறையை மீண்டும் ஒருதடவை நிரூபித்துள்ளார்!!

11
பொது அறிவுப்போட்டி 2018Sltnews

கடந்த மாதம் (26.09.2017) மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தால் சித்தாண்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இணையத்தளங்களிலோ, பத்திரிகைகளிலோ வெளிவராத குறித்த செய்தியை நாங்கள் தற்போது வெளியிட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

2004 ஆம் ஆண்டு காலப் பகுதியில் துப்பாக்கி மற்றும் கைக்குண்டுகள்,ரவைகளுடன் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு (போர் நிறுத்த காலப்பகுதியில் புலிகள் இயக்க சந்தேக நபராக கைதுசெய்யப்பட்டார்) ஒன்பது வருடங்களுக்கும் மேலாக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கந்தசாமி கரன் என்ற இளைஞர் கடந்த 2013 ஆம் ஆண்டுதான் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

தொடர்ந்தும் அவரது வழக்கு விசாரணை மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த நிலையில் கடந்த 26.09.2017 அன்று அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ஐந்து வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

குறித்த சம்பவத்தை எனது நண்பன் சட்டத்தரணி Stanislaus Celestine க்கு தெரியப்படுத்திய போது உடனடியாக குறித்த நபருக்கு உதவுவோம் எனக் கூறியதோடு அதற்கான ஆக்கபூர்வமான செயற்பாடுகளையும் முன்னெடுத்தார்.

குறித்த வழக்கின் தீர்ப்புப் பிரதிகளை மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் பெற்று சட்டத்தரணிக்கு அனுப்பி வைத்தேன்.

அதன்படி நேற்றைய தினம் மேன்முறையீட்டு ஆவணங்களைத் தயார் செய்து இன்று அதிகாலை 1.45 மணியளவில் எனக்கு அனுப்பியிருந்தார்.

இன்று அதிகாலை குறித்த ஆவணங்களைப் பெற்று, மட்டக்களப்பு மேல் நீதிமன்றப் பதிவாளரிடம் சமர்ப்பித்து குறித்த கந்தசாமி கரன் என்ற ஆயுள் தண்டனைக் கைதிக்கான மேன்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.

சட்டத்தரணி செலஸ்டின் தனது சமூக அக்கறையை மீண்டும் ஒருதடவை வெளிப்படுத்தி யாழ்ப்பாணத்திலிருந்து குறித்த ஏழை இளைஞனின் மேன்முறையீட்டுக்காக அர்ப்பணிப்போடு செயலாற்றி, மேன்முறையீட்டைத் தாக்கல் செய்ததோடு மட்டுமின்றி தொடர்ந்தும் மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்கை நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் செய்துவருகிறார்.

அரசியல் கைதிகளை மீட்டு அவர்களின் குடும்பத்துடன் ஒன்றுசேர்ப்போம்…ஒற்றுமையுடன் செயல்படுவோம்…