இன்று நடந்த சாலை மறியல் போராட்டமும் ஆளுநர் அலுவலக மறியல் போரும்.

10
பொது அறிவுப்போட்டி 2018Sltnews

யாழ்ப்பாணம் சந்து பொந்துகள் எல்லாம் முடங்கியது ஹர்தாலால். ஏன் இந்த ஹர்த்தாலும் சாலை மறியலும் சில முகநூல் நன்பர்கள் அனாவசியமற்ற போராட்டம் என அங்கலாய்த்ததை காணமுடிந்தது.

ஒரு நாள் முடக்கம் என்பது தமிழர்களின் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்புக்கள் ஏற்படுத்த போவதில்லை. ஆனால் ஸ்ரீலங்கா பங்கு சந்தையில் சிறிய தாக்கத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாது அந்நிய முதலீடுகளை இட்டுள்ள நாடுகளுக்கு சலிப்புத்தன்மையை ஏற்படுத்தும். அதனால் நாளடைவில் முதலீடுகளை கொண்டுள்ள நாடுகள் அரசுக்கு மென் அழுத்தங்களை நிற்சயமாக வழங்கும்.

இந்த ஆட்சி நாம் வைக்கும் குறைந்த கோரிக்கைகளை புறம்தள்ளுவதையும் பாரமுகமாக இருப்பதையும் அவதானிக்க முடிகிறது. ஆனால் பொருளாதார இலகு கடன்கள் வழங்கும் நாடுகள் வைக்கும் சிபாரிசுகளை தலை மேல் சுமந்து நிறைவேற்றும். அத்தோடு ஐ நா வால் தற்போது அனுப்பி வைத்துள்ள நிபுணர் குழுவுக்கும் எம் செய்தி பலமாக பதியும். எனவே பொருத்தமான நேரத்தில் சிறை கைதிகள் மேற்கொள்ளும் உண்ணாவிரதம் அதோடு இனைந்த ஹர்த்தால் சாலை மறிப்பு போராட்டங்கள் நல்ல பலனை தரும்.

நிர்பந்தங்களே எமக்கான தீர்வின் கதவை திறக்கும் சாவி. இதை விடுத்து எல்லாம் சுமூகமாக நடக்கும் என்றிருந்தால் தற்போது வந்துள்ள இடைகால அறிக்கை போல் எல்லாம் வெறுமையாகவே இருக்கும்.

நன்றி ஸ்ரீரங்கன்.