யாழில் இடம்பெறும் ஜனாதிபதியின் நிகழ்வை புறக்கணிக்க கோரிக்கை: பொது அமைப்புக்கள்

7
பொது அறிவுப்போட்டி 2018Sltnews

யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள ஜனாதிபதியின் நிகழ்வை புறக்கணிக்குமாறு பொது அமைப்புகளும,அரசியல் கட்சிகளும் மக்களிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் இடம்பெறும் ஜனாதிபதியின் நிகழ்வை புறக்கணிக்க கோரிக்கை: பொது அமைப்புக்கள்

அரசியல் கைதிகள் தங்களின் உயிர்களை பணயம் வைத்து போராடி வருகின்ற நிலையில், அவர்களது நியாயமான கோரிக்கைகளை பொருட்படுத்தாது, எதிர்வரும் (14.10.2017) சனிக்கிழமை அன்று, ஜனாதிபதியும் எதிர்கட்சித் தலைவரும் பல்வேறு நிகழ்வுகளில் பங்குகொள்வதற்காக யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளனர்.

இது தமிழ் மக்களுக்கு எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல என்பதுடன், வன்மையாக கண்டிக்கப்படவேண்டியதுமாகும்.

உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுவரும் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாது ஜனாதிபதியோ,எதிர்கட்சித் தலைவரோ வெறுமனே நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக வருகை தருவார்களாக இருந்தால், அவர்களுக்கு எதிராக காத்திரமான எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டிய நிலைக்கு தமிழ் மக்கள் நிர்பந்திக்கப்படுவார்கள்.

யாழில் இடம்பெறும் ஜனாதிபதியின் நிகழ்வை புறக்கணிக்க கோரிக்கை: பொது அமைப்புக்கள்

இவ்வாறானதொரு சூழலில், அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை புறக்கணித்து ஜனாதிபதியும் சம்பந்தனும் 14.10.2017, சனிக்கிழமை அன்று, யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் நிகழ்வுகளில் கலந்துகொள்வார்களாயின், அந்த நிகழ்வுகளை புறக்கணிக்குமாறு வடக்குமாகாண முதலமைச்சர் உட்பட, மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழையமாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரை தாழ்மையுடன் வேண்டிக் கொள்கின்றோம்.

என பொது அமைப்புக்களும் அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன.

இதேவேளை தமிழ் அரசியல் கைதிகள் மூவரினதும் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு ஜனாதிபதியின் மீதும் எதிர்கட்சித் தலைவர் மீதும் அழுத்தத்தை பிரயோகிக்கும் முகமாக நாளையதினம்(13.10.2017) வெள்ளிக்கிழமை வடக்கு மாகாணம் தழுவிய வகையில் கதவடைப்புபோராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.