தந்தை மகளுக்கு சூடு தந்தையை காப்பாற்றும் தாய் ஏனென்று தெரியுமா???(அக்கரைப்பற்றில்)

இன்று பிற்பகல் 3.15 அளவில் அக்கரைப்பற்று பொலீஸ் நிலயத்தில் மனதை உருக்கும் காட்சி நண்பரினால் அவதானத்திலிருந்து பெறப்பட்ட சம்பவமாகும்.

அக்கரைப்பற்று வீரம்மா காளி கோவிலுக்கு அருகில் உள்ள கிராமசேவையாளரின் வீட்டிற்கு அருகிலுள்ள சசிகுமார் எனும் மேசன் ஒருவனின் மனச்சாட்சியற்ற செயல் தனது 5 வயதான பெண் பிள்ளையினை அடித்துத் துன்புறுத்தி இரு கைகளையும் பின்புறமாக கட்டி வாய்,கை,கால்,இடுப்பு பகுதிகளில் நெருப்பினால் சூடு வைத்துக் காயப்படுத்தி சித்திரவதை பண்ணிய போது அந்த பிள்ளை மயங்கி விழுந்த நிலையிலேயே விட்டுச் சென்றுள்ளார்.

இந்தப் பிள்ளையின் தாய் கடைக்குச் சென்ற நிலையில் எதேச்சையாக அங்கு வந்த அந்த பிள்ளையின் அம்மம்மா(கீழே உள்ள படத்திலுள்ள வயோதிப அம்மா)பார்வையிற்கு தென்பட பிள்ளைக்கு தண்ணீர் தெளித்து எழுப்பி வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முற்பட்டார்.

அப்போது அங்கு வந்த பிள்ளையின் தாய் வேண்டாம் வைத்தியசாலைக்குப் போனால் இவரை பொலீஸ் பிடிக்கும் பிடிச்சா வட்டிக்கு பெற்ற கடன் ,ஏலச் சீட்டு பணம் செலுத்தனும்.

இவர் உள்ளே போனால் யார் கட்டுவது(இவ் நுண்கடன்கள்,சீட்டுகளால் பல வீடுகளில் ஆண்களின் இவ்வாறான செயற்பாடுகள் மூடி மறைக்கப்படுவதோடு, பல பெண்கள் தவறான வழிமுறைகளிலும் செல்கிறார்கள்)என்று கூறி தடுத்து விட்டார்.

மூன்று ஆண் பிள்ளைகளும் இந்த ஒரேயொரு பெண் பிள்ளையுமே இவர்களுக்கு இருக்கும் நிலையில் இவரின் இன்னும் பல துர் நடத்தைகளையும் இப்படியான கொடூ சித்திரவதைகளை பொறுக்க முடியாத பாட்டி தனது மருமகளிடம் விடயத்தை சொல்லி(மருமகள்தான் அந்த பிளைளைக்கு உணவூட்டுகிறார்)பொலீஸ் நிலையம் அழைத்து வந்திருந்தார் இந்த மனிதாபிமானமற்ற தந்தைக்கு தண்டனை கிடைக்க வேண்டும்.

அத்தோடு அவ் வட்டிக்கடன், சீட்டு என்பன கட்டுவதற்கும் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகவும் இந்த நீதித் துறையும் பொதுமக்களும் செயற்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

0Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*