உளவுத்துறைக்கு டிமிக்கி! வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேச்சு!! திருந்தாத சின்னம்மா

சசிகலாவுக்கு கர்நாடக சிறைத்துறை கொடுத்துள்ள பரோல் நிபந்தனைகளில் மிக முக்கியமானது அரசியல் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட கூடாது என்பது. மேலும் யாரையும் தானாக சென்று சந்திக்க கூடாது என்ற நிபந்தனையும் அதில் அடங்கும்.

இந்நிலையில் சசிகலா பரோலில் வெளியே வந்தாலும் கூட அவரது நடவடிக்கைகளை உளவுத்துறை உன்னிப்பாக கவனித்து வருவதாக கூறப்படுகிறது.

குறிப்பாக சசிகலா வீட்டை விட்டு எங்கு செல்கிறார், எப்போது மீண்டும் இல்லத்திற்கு வருகிறார் என்பது உள்ளிட்ட விவரங்களை உளவுத்துறை அதிகாரிகள் கவனித்து வருகின்றனர்.

இந்நிலையில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் சசிகலா கட்சியின் முக்கிய புள்ளிகளிடம் பேசிவருவதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக எடப்பாடி அணியில் இருக்கும் தனது ஆதரவாளர்களிடம் பேசி வருவதாக கூறப்படுகிறது.

அவர்களிடம் பேசும்போது பழைய விஷயங்களை நினைவுபடுத்தி அவர் பேசி வருவதாக சொல்லப்படுகிறது. தினகரனால் எழுப்ப முடியாத சிலீப்பர் செல்கள் சசிகலாவல் எழுப்ப முடிகிறதா என்பது தான் இந்த முயற்சிக்கான திட்டம் என சொல்லப்படுகிறது.

33Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*