நீதிபதி: “நீ அந்த ஆள் துப்பாக்கியால் சுட்டதை நேரில் பார்த்தாயா?”

சாட்சி: “இல்லை ஐயா! ஆனால் சுடும் சப்தத்தைக் கேட்டேன்.”

நீதிபதி: “அது போதுமான சாட்சியம் ஆகாது.”

உடனே சாட்சி கூண்டிலிருந்து வெளியேறி நீதிபதிக்கு முதுகைக் காட்டிய வண்ணம் பலமாக சப்தம் போட்டு சிரித்தான்.

நீதிபதி அவனைக் கூப்பிட்டு நீதிமன்றத்தை அவமதித்ததற்காக நடவடிக்கை எடுக்கப் போவதாக சொன்னார்.

சாட்சி: “நீங்கள் நான் சிரித்ததைப் பார்த்தீர்களா ஐயா?”

நீதிபதி: “இல்லை. ஆனால் நீ சிரித்த சப்தம்தான் எல்லோருக்கும் கேட்டதே.”

சாட்சி: “அது குற்றத்தை நிரூபிக்க போதுமானது இல்லையே ஐயா!”

83Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*