மருமகள் திட்டியதால் கோவிலில் பிச்சையெடுத்த அம்பானி

தனது உழைப்பால் வளர்ந்த கோடீஸ்வரர் ஒருவர் மருமகள் திட்டியதால் கோயிலில் பிச்சைக்காரர் போல் மூன்று மாதம் வாழ்ந்து வந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், செஞ்சி அருகே உள்ள தீவனூர் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன். தனது உழைப்பால் வளர்ந்து கோடீஸ்வரர் ஆனவர். விவசாய குடும்பத்தில் பிறந்த இவருக்கு மனைவியும், 3 மகன்களும் உள்ளனர். ஒரு மகனுக்கு மட்டும் திருமணமாகி அனைவரும் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது மருமகளுடன் நடராஜனுக்கு தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த நடராஜன் வீட்டில் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் திடீரென வீட்டை விட்டு வெளியேறினார்.

வீட்டை விட்டு வெளியேறி சுற்றித் திரிந்த நடராஜன் காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூரில் உள்ள முருகன் கோவிலில் இறுதியில் சென்றடைந்துள்ளார். கோயிலில் கிடைக்கும் பிரசாதம் மற்றும் பக்தர்கள் கொடுக்கும் பிரசாதம் ஆகியவற்றை சாப்பிட்டு வாழ்ந்துள்ளார்.

வீட்டில் இருப்பவர்களும் நடராஜனை தொடர்ந்தும் தேடிவந்தனர். அப்படி ஒரு நாள் குடும்பத்தினர் திருப்போரூர் கோயில் வந்துவிட்டு,கடையில் தேநீர் அருந்த சென்றுள்ளனர். குறித்த சமயத்தில் ஒருவர் தாடியுடன் மடத்தில் அமர்ந்து இருப்பதையும் அவர் பார்ப்பதற்கு தங்களது தந்தை போல் இருப்பதைக் கண்டு அருகில் சென்று பார்த்தனர்.

குறித்த நபர் தங்களது தந்தைதான் என்பதை அறிந்து, தங்களது தாயிடமும் கூற, அனைவரும் நடராஜனை சமாதானம் செய்துள்ளனர். இதன் பின்னர் மகன்கள் மற்றும் மனைவி கதறி அழுவதைப் பார்த்து மனம் உருகி அவர்களுடன் நடராஜன் வீடு திரும்பினார்.

0Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*