உங்க குடும்பத்துக்கே ஒரு கும்புடு: வித்யாசமாக எச்சரித்த போலீசார்

8
பொது அறிவுப்போட்டி 2018Sltnews

போக்குவரத்து விதிகளை மீறுவதால் ஏராளமான விபத்துகள் நடந்து வருகின்றன. இதுகுறித்து விழிப்புணர்வையும் காவல்துறை பல்வேறு இடங்களில் வலியுறுத்தி வருகிறது. ஆனால் இது இன்னும் பல இடங்களில் பின்பற்றப்படவில்லை என்பது தன வருத்தமாக உள்ளது.

இந்நிலையில் ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் ஹனுமந்தராயுடுவின் குடும்பத்தினர், இருவர் பின்னிருக்கையிலும், வாகனத்தின் பெட்ரோல் டேங்க் மீது இரு சிறுவர்கள் என 5 பேர் அமர்ந்திருந்தனர். இதனை பார்த்த காவல் ஆய்வாளர் சுபகுமார் வாகனத்தை நிறுத்தியுள்ளார். இதனால் அபராதம் எதுவும் வசூலிப்பாரோ என ஹனுமந்தராயுடு பயந்துள்ளார்.

ஆனால் சுபகுமாரோ தனது இருகைகளையும் கூப்பி போக்குவரத்து விதிகளை இனி மீற வேண்டாம் என கூறியுள்ளார். இந்த புகைப்படமானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதுகுறித்து சுபகுமார் கூறுகையில், இதற்கு முன்னதாக சாலை போக்குவரத்து குறித்து ஒரு விழிப்புணர்வு நிகழ்வு நடத்தினோம். அங்கு ஹனுமந்த்ராயுடுவும் இருந்தார். அவர் பலமுறை இதுபோல மீறியதால் எச்சரித்தும் விட்டோம்.

இருந்தும் அவர் இன்று இதுபோல 5 பேருடன் வந்ததால் வேறு வழியின்றி கையெடுத்துகும்பிட்டேன் என கூறினார்.