நாமலின் (X) பெண் பணிப்பாளர் கைது

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் பெண் செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

பலபொல ஆராச்சிகே ஒரனெலா இரேஷா சில்வா என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பணத் தூய்மையாக்கல் குற்றச்சாட்டில் சிக்கியிருந்த குறித்த பெண் அபுதாபியில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாமல் ராஜபக்ச தவறான முறையில் சம்பாதித்த 30 மில்லியன் ரூபாய் பணத்தை கவிரஸ் கொபரேஷன் தனியார் நிறுவனத்திற்கு பயன்படுத்தியமை ஊடாக பணம் தூய்மையாக்கல் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சிகப்பு எச்சரிக்கை விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜபக்சர்களின் குற்றங்களுடன் தொடர்புடைய பிரதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாளை காலை விமானம் ஒன்றின் ஊடாக ஒரனெலா கவிரஸ், இலங்கைக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பாதுகாப்பு பிரிவு தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு நாளை உயர் நீதிமன்றில் விசாரணைகக்கு எடுத்து கொள்ளப்படவுள்ளது.

நாமல் ராஜபக்ச, இந்திக்க பிரபாத் கருணாஜீவ, சந்திசேகர பவித்ரிகா சுஜானி போகொல்லாகம, பட்டபொல ஆராச்சியே ஒரனெலா இரேஷா சில்வா, நித்தியா சேனானி சமரணாயக்க மற்றும் கவிரஸ் கொபரேஷன் தனியார் நிறுவனம் உட்பட 6 பேருக்கு எதிராக இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

அபுதாபியில் கைது செய்யப்பட்ட ஒரனெலா கவிரஸ் கொபரேஷன் தனியார் நிறுவனத்தின் பங்குதாரராகவும், நிர்வாக குழு உறுப்பினராகவும், அந்த நிறுவனத்தின் செயலாளராகவும் செயற்பட்டுள்ளார்.

குறித்த நிறுவனத்திற்கு தவறான முறையில் சம்பாதித்த பணம் பயன்படுத்தியமை உட்பட பல குற்றச்சாட்டு தொடர்பில் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக பல்வேறு வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன.

இலங்கை பொலிஸாரின் கோரிக்கையினால் சர்வதேச பொலிஸார் வெளியிட்ட சிவப்பு எச்சரிக்கைக்கு அமைய ஒரனெலா இவ்வாறு கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படவுள்ளார்.

ராஜபக்சர்கள் தொடர்பில் ஊழல் மோசடி தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட பின்னர் நாட்டை விட்டு தப்பி சென்று மறைந்து வாழும் பலர் இலங்கை பொலிஸாரின் கோரிக்கைக்களுக்கமைய எதிர்வரும் நாட்களில் இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளனர் என குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

63Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*