கடிதம் எழுதிவைத்துவிட்டு இலங்கை யுவதி தற்கொலை! காரணம் வெளியானது

22
பொது அறிவுப்போட்டி 2018Sltnews

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம், ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செங்கலடி ஐயங்கேணி பிரதேசத்தில் நேற்றைய தினம் சடலமாக மீட்கப்பட்ட யுவதியின் மரணம் தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளன.

குறித்த யுவதி கடிதம் ஒன்றை எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்கொலைக்கான காரணம் காதல் விவகாரமாகவோ அல்லது அதிக தனிமை காரணமாகவோ இருக்கலாம் என்றும் இதனால் ஏற்பட்ட மன உளைச்சலே தற்கொலைக்கு தூண்டியிருக்கலாம் என உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த யுவதியின் தாய் மற்றும் தந்தை இருவரும் வேறு திருமணம் செய்துள்ளதாகவும் யுவதி அவரது பாட்டியுடன் வசிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச் சம்பவம் குறித்து ஏறாவூர் பொலிசார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை இலங்கையில் அதிகளவானவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் மாகாணமாக கிழக்கு மாகாணமே காணப்படுகிறது என, அம்மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார்.

மேலும் 30 வயதான இளைஞர், யுவதிகளே இவ்வாறு தற்கொலை செய்துகொள்வதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.