தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் இன்றாகும்.

17
பொது அறிவுப்போட்டி 2018Sltnews

பெண் அடிமை விலங்குடைத்து வீட்டுக்குள்ளே பூட்டி வைத்திருந்த பெண்கள் வீறு கொண்டெழுந்து எதிரி குகை புகுந்த வரலாற்றையும்.

அடுப்பங்கரையில் ஊதுகுழல் ஏந்தி நின்ற பெண்களின் கரங்களை துப்பாக்கிகள் ஏந்த வைத்து பெண்களை வீர வரலாறு எழுதவைத்தான் எம் பெரும் தலைவன் அதி மேதகு வே.பிரபாகரன் அவர்கள்.

சமத்துவம் _சகோதரத்துவம்_சம வாய்ப்பு_சம பயிற்சி என அனைத்திலும் ஆண்களுக்கு சரி நிகர்சமனாய் எம் தாயகத்தில் வாழ்ந்த பெரும் வரலாற்றுச் சொந்தக்காரர் எம் மகளீர்.

இன்று பல சோதனைகள், வேதனைகளுடன் பல பெண்கள் வாழ்ந்தாலும் எம் கரிகாலன் காலம் மீண்டும் கிட்டும் எனும் நம்பிக்கையுடனேயே நாளாந்தம் தம் வாழ்வியலை நகர்த்திச் செல்கிறார்கள்.

பெண் விடுதலை என்ற இலட்சியப் போராட்டமானது எமது தமிழீழ விடுதலை இயக்கத்தின் மடியில் பிறந்த அக்கினிக் குழந்தை……!

தமிழீழத் தேசியத் தலைவர்.

மேதகு வே.பிரபாகரன்.