யாழிலிருந்து வவுனியா வந்த பேரூந்தில் சிக்கிய மூவர்

14
பொது அறிவுப்போட்டி 2018Sltnews

யாழ்ப்பாணம் பருத்துத்துறையிலிருந்து வவுனியாவிற்கு மாட்டிறைச்சி கடத்திய மூவரை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் கையும் மெய்யுமாகப் பிடித்துள்ளனர்.

தனியார் பேருந்தில் கடத்த முற்பட்ட ஓட்டுநர் உள்ளிட்ட மூவரே இவ்வாறு பொலிஸாரினால் கைதாகியுள்ளனர்.

இன்று மாலை 5.00 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது,

தனியார் பேருந்து ஒன்றில் சட்டவிரோதமாக மாட்டிறச்சி கடத்துவதாக வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு உளவு கிடைத்துள்ளது.

இந்த உளவின் அடிப்படையில் தாண்டிக்குளம் புகையிரத நிலையத்திற்கு முன்பாகவுள்ள பேரூந்து தரிப்பிடத்தில் வைத்து பொலிஸார் பேரூந்தினை சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது மிகச் சூதனமான முறையில் 187 கிலோ கிராம் மாட்டிறச்சி இரண்டு பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.

இதன்பின்னர் பேரூந்தினை வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், 21,27,35 வயதுடைய மூவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மூவரையும், மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை கடந்த சில காலங்களாக யாழ்ப்பாணத்தில் கள்ள மாடு வெட்டப்பட்டு தென்பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றமையும் இங்கே சுட்டிக்காட்டத்தக்கதாகும்.