Breaking News

வடக்கு, கிழக்கு இணைந்தே இருக்க வேண்டும்

வடக்கு, கிழக்கு என்பது எப்போதும் இணைந்தே இருக்க வேண்டும் என்று தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பிரதியமைச்சருமான வி.முரளீதரன் (கருணா அம்மான்) தெரிவித்தார்.

இன்று நண்பகல் கட்சி தலைமையாகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“வடக்கு, கிழக்கு இணைந்து இருக்க வேண்டும் என்பது புதிய கருத்தல்ல. அது தந்தை செல்வாவின் கூற்றாகும். இதனை யாரும் மாற்ற முடியாது. எங்களுடைய கட்சி, வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைய வேண்டுமென்ற கருத்தையே கொண்டுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares