யாழிற்கான புகையிரத சேவை நாவற்குழி வரை மட்டுப்படுத்தல்

6
பொது அறிவுப்போட்டி 2018Sltnews

கொழும்பு – காங்கேசன்துறை வரையான புகையிரத சேவை நாவற்குழி புகையிரத நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை கொழும்பு – காங்கேசன்துறை வரையான புகையிரத சேவை நாவற்குழி புகையிரத நிலையம் வரை மட்டுப்படுத்தப்படவுள்ளது.

நாவற்குழியில் உள்ள புகையிரத பாலத்தில் உள்ள திருத்த வேலை காரணமாக இந்த சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த தினங்களில் புகையிரதத்திற்கு முற்பதிவு செய்த பயணிகள் விசேட பேரூந்து மூலம் நாவற்குழி புகையிரத நிலையத்திற்கு அழைத்து செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண புகையிரத திணைக்கள உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.