கவர்ச்சி கன்னி சில்க் ஸ்மிதா பற்றி நீங்கள் அறியாத உண்மை..! தற்கொலையின் காரணம்..!

46
பொது அறிவுப்போட்டி 2018Sltnews

ஆந்திராவின் ஏழைக் குடும்பத்தில் பிறந்த விஜயலட்சுமிக்கு மிகப்பெரிய வரமாக அமைந்தது அவரரு பேரழகு. சாபமாக அமைந்ததும் அதுதான். அவள் பிறந்த கிராமத்திலேயே அவளை 13 வயதிலேயே திருமணம் செய்ய பலர் திட்டம் போட்டார்கள்.

அதில் ஒருவரின் திட்டம் வெற்றியும் பெற்றது. ஆனால் 13 வயது சிறுமி நடுத்தர வயதை தாண்டிய கணவனின் பாலியல் தொல்லை தாங்க முடியாமல் சென்னை நோக்கி ஓடி வந்தாள். சினிமாவில் உதவி மேக் உமனாக வாழ்க்கையை துவங்கினார். இங்கும் அவர் அதே பிரச்சினைகளை சமாளிக்க வேண்டியது இருந்தது.

வண்டிச்சக்கரம் படத்தின் மூலம் நடிகையாகி சில்க் ஸ்மிதா ஆன பிறகும் அவரை அவர் அழகு துரத்தியது, அரவணைத்துக் கொள்ள ஆயிரம் பேர் முன் வந்தார்கள். திருமணம் செய்து கொண்டு வாழ யாரும் முன்வரவில்லை.

அவர் சிறந்த நடிகையாக விரும்பினார். அலைகள் ஓய்வதில்லை, நீங்கள் கேட்டவை, மூன்றாம் பிறை, மலையூர் மம்பட்டியான் உள்ளிட்ட பல படங்களில் அவர் தன் நடிப்பு திறமையை நிரூபித்தார். ஆனாலும் அவரை சினிமா கவர்ச்சி நடிகையாகத்தான் பார்த்தது. அந்த பார்வையே அவரை மரணம் வரைக்கும் கொண்டு சென்றது.

கவர்ச்சி கன்னி சில்க் ஸ்மிதா மறைந்து இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவடைகிறது. ஆனால் அவர் இடத்தை யாராலும் பிடிக்க முடியயில்லை. ஒரு நடிகை தன் சமகாலத்தவர்களை மட்டுமே தன் அழகால் கட்டிப்போட முடியும்.

ஆனால் சில்க் ஸ்மிதா மட்டும் தான் மூன்று தலைமுறையினரை கட்டிப்போட்டவர். தான் அறிமுகமான காலத்தில் அன்றைய ரசிகர்களையும் அதற்கு முந்தைய 60களின் ரசிகர்களையும் கவர்ந்திழுத்தார்.

இப்போது அவர் உயிரோடு இல்லாவிட்டாலும் இந்த தலைமுறையினரும் சில்க் ஸ்மிதாவை ஆராதிக்கிறார்கள்.