கண்ட இடத்தில் கை வைத்தார்? தடவியல் நிபுணர் சினேகன் மீது சுஜா புகார்

12
பொது அறிவுப்போட்டி 2018Sltnews

தடவியல் நிபுணர் சினேகன் கண்ட இடத்தில் தொட்டதாக நடிகை சுஜா வருணி குற்றம் சாட்டியுள்ளார். பிக் பாஸ் வீட்டில் சினேகனுக்கும், சுஜாவுக்கும் இடையே மோதலாகவே உள்ளது.

தடவியல் நிபுணர் என்று பெயர் எடுத்த சினேகன் மீது சுஜா பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். பலூன் டாஸ்க் விளையாடியபோது சினேகன் ஆக்ரோஷமாக இருந்தார்.

சுஜா, ஹரிஷை பிடித்து தள்ளி காயப்படுத்தினார். இது குறித்து சுஜா கணேஷிடம் கூறியதாவது,

முன்பு பிந்து ஏன் கேமில் இருந்து சென்றார் என்று எனக்கு தற்போது புரிகிறது. சினேகன் ரொம்ப ஆவேசமாக விளையாடினார். ஹரிஷை போட்டு தரதரவென இழுத்தார். அது தப்பு.

கேமில் இப்படி எல்லாம் செய்யக் கூடாது. வேண்டும் என்றே மைக்கை பிடித்து அறுத்தார் சினேகன். அதனால் நான் அவரை இழுத்தபோது உன்னை அடித்துவிடுவேன் என்றார்.

அவர் அடிச்சா நான் சும்மா இருப்பேனா? அவருக்கு 2 கையில் இருந்தால் எனக்கு இல்லையா? என்னை எல்லாம் அடிக்க முடியாது. கேம் இல்லை சண்டை தான் நடந்தது.

விளையாடும்போது நீங்கள் எப்படி பிந்து மீது கண்ட இடத்தில் கை படக்கூடாது என்று கவனமாக இருந்தீர்கள். ஆனால் சினேகன் அப்படி இல்லை என்று தெரிவித்தார் சுஜா.

பலூன் விளையாட்டின்போது பிந்து, ஆரவ், கணேஷ் அடங்கிய அணி அழகாக விளையாடியது. ஆனால் சினேகனோ சுஜா, ஹரிஷிடம் சண்டைக்கு பாய்ந்தார்.