இரத்தினபுரியில் சற்றுமுன் மண்சரிவு!! மக்கள் இடம்பெயர்வு

இரத்தினபுரி மாவடத்தில் சற்றுமுன்னர் மண்சரிவு ஏற்பட்டுள்ளது

இரத்தினபுரியில் சற்றுமுன் மண்சரிவு – பாதுகாப்பான இடங்களிற்கு மக்கள் இடம்பெயர்வு

இரத்தனபுரி ஹபுகஸ்தென்ன வேவல்கட்டிய பிரதேசத்தில் சற்று முன் குறித்த மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீலங்காவின் 5 மாவட்டங்களிற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இரத்தினபுரி, எஹெலியகொட பிரதேசத்தின் மலைப்பாங்கான பகுதிகளில் வசிக்கும் மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் இன்று மதியம் குறித்த மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இரத்தினபுரியில் சற்றுமுன் மண்சரிவு – பாதுகாப்பான இடங்களிற்கு மக்கள் இடம்பெயர்வு

இதேவேளை பெய்துவரும் அதிக மழை காரணமாக மண்சரிவு அபாயம் அதிகரிக்கும் வாய்ப்புக்கள் உள்ள நிலையில் ஏனைய மலைப்பாங்கான பகுதிகளில் வசிக்கின்ற மக்களும் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.

அத்துடன் இரத்தினபுரி மாவட்டத்தின் 5 பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு நாளை முதல் விடுமறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

134Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*