கொழும்பு, கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி

கொழும்பு ஜம்பட்ட வீதியில் சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண் ஒருவர் உள்ளிட்ட இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

இந்த சம்பவத்தையடுத்து அந்த பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். சம்பவத்திற்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை.

இதேவேளை, துப்பாக்கிச் சூடு மேற்கொண்டவர்கள் தொடர்பான தகவலும் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில், பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

89Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*