வவுனியாவில் கருணாவால் களம் இறக்கப்பட்டவரின் சுயரூபம் அம்பலம்!

Loading...

மகிந்த ராஜபக்சவின் உயிர் நண்பனும், மகிந்தவின் போர்வெற்றிக்கான பிரதான சூத்திரதாரியும்,தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமாகிய “வினாயகமூர்த்தி முரளிதரன் என்ற கருணா” ஊடாக வடகிழக்கு தமிழர்களை பாரிய பயபீதிக்குள் வைத்து அடக்கியாள சிங்கள புலனாய்வாளர்கள் பெரும் முயற்சியினை மேற்கொண்டுவருகிறார்கள்.

இதற்கான தகுந்த ஆதாரங்களாக கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட கருணாவின் புதிய கூட்டணியை நாம் எடுத்துக்கொள்ளலாம்.

அதாவது “தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி”எனும் பெயருக்குள் கருணாவோடு ஐக்கியப்பட்டவர்கள் யாரென்று பார்த்தால் இலகுவாகப் புரியும் இவர்களின் எதிர்கால செயற்பாடுகள் எப்படி இருக்கப்போகின்றதென்பதை.

உலக நாடுகளின் பாரிய அழுத்தத்தால் தற்காலிகமாக தனது பதவியை இழந்து பல்லு பிடுங்கப்பட்ட சிங்கமாக தனது கூட்டாளிகளோடு இணைந்து பிறிதொரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து தனக்கு சாதகமாக காய்களை நகர்த்திவரும் மகிந்த ராஜபக்சவின் திட்டமிடலுக்கு ஏற்பவே வடகிழக்கில் கருணாவின் தலைமையில் “தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி”நகர்ந்துவருகின்றது.

உண்மையில் மகிந்த ராஜபக்சவின் தமிழர்கள்மீதான கடும்போக்குவாதத்தை பிரதிபலிக்கக்கூடிய தமிழ் கடும்போக்காளர்களாகவே “அதாவது தமிழருக்கு விரோதமாக செயற்படக்கூடிய”நபர்களையே மகிந்த ராஜபக்ச அவர்கள் தனக்கு ஆதரவான தமிழ் சக்திகளாக தேர்ந்தெடுத்து வளர்த்துவருகிறார்.

இதில் குறிப்பாக கருணா குழு,பிள்ளையான் குழு,டக்கிளஸ் குழு மற்றும் தாஸ் குழு போன்ற தமிழருக்கு உதவாத தமிழ்விரோதக் குழுக்களே மகிந்த ராஜபக்சவின் மனவிருப்பத்திற்குரிய கைப்பாவைகளாக களமிறக்கப்பட்டுள்ளார்கள்.

மேலும் இவற்றுடன் இணைந்து பயணிக்கக்கூடிய ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளும் அவற்றின் தமிழ்விரோத போக்குடைய தலைவர்களும் சந்தர்பம் கிடைக்கும்போது மகிந்தவின் கூட்டணியோடு இணைந்து பயணிப்பதற்கும் தயாராக உள்ளனர்.

இங்கே ஆயுதம் தூக்கி தமிழர்களுக்கு எதிராக போராடியவர்கள் நேரடியாகவே தமிழர்களை வகைதொகையின்றி கொன்றதுபோன்றே, ஆயுதத்தை ஏந்தாதவரகளும் தாம் கதிரைகளில் இருந்த இரையிலேயே தமிழர்களின் ஆயுதப்போராட்டத்தையும்,மக்களையும் அழிப்பதற்கு எதிரிகளுக்கு துணைபோனார்கள் என்பதை யாரும் மறுக்கமுடியாது.

இனி கருணாவால் களமிறக்கப்பட்டுள்ள வவுனியாவை சேர்ந்தவர் அரவிந்தன். இந்த அரவிந்தன் என்பவர் விடுதலைப் புலிகளால் குண்டுத்தாக்குதல் மூலம் கொல்லப்பட்ட“புளொட் மாணிக்கதாசன்” என்பவரின் நெருங்கிய உறவினர் ஆவார். இவர் மாணிக்கதாசனின் மக்கள்விரோத செயற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில் பள்ளிச்சிறுவனாக அதாவது 16,17வயது நிரம்பியவராக இருந்துள்ளார்.

இவர் மாணிக்கதாசனின் உறவினர் என்ற அடிப்படையில் அவரின் கொலைக்கு பழிவாங்கும் முகமாக தன்னை இலங்கை புலனாய்வடன் இணைத்து செயற்பட்டுவந்தார்,வருகிறார்.

அத்துடன் இவர் மகிந்த ராஜபக்சவின் மகன்களோடும் நட்புரீதியாகவும் தொடர்பில் இருந்துவருகிறார்.

மேற்குறிப்பிட்ட அரவிந்தன் என்பவர் கருணாவுடன் தொடர்புகொண்டு கருணா குழுவுடன் இணைத்து பயணிக்க தான் தயாராக இருப்பதாக கூறியதன் பொருட்டே கருணா இவரை தன்னுடன் இணைத்து பயணிக்க முடிவுசெய்ததுள்ளார்.

இந்த அரவிந்தன் போன்றவர்களே இலங்கையில் எதிர்கால தமிழர் அரசியல் பிரதிநிதிகளாக இருக்கவேண்டும் என்பதையே சிங்கள தலைவர்களும் விரும்புகின்றார்கள் என முக நுால்களில் செய்திகள் தெரிவிக்கின்றன.

43Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*