கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்ட கிருஷ்ணா தொடர்பில் வெளியான புதுத் தகவல்

கொழும்பு மாநகர சபை உறுப்பினரும் நவோதய மக்கள் முன்னணியின் தலைவருமான கிருஷ்ண பிள்ளை கிருபானந்தனின் மரணம் போதைப்பொருள் வியாபரத்துடன் தொடர்புடையதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த அவர், 24 மணிநேரத்துக்குள் இரண்டு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் புறக்கோட்டை காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட செட்டியார்தெருவில் பழக்கடையொன்றுக்குள் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கொழும்பு மாநகர சபை உறுப்பினரான 40 வயதுடைய கிருஷ்ண என்பவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இவர் மீது கஞ்சா போதைப்பொருள் வியாபாரம் தொடர்பில் இரண்டு வழக்குகள் காணப்படுகின்றன. இதில் குற்றவாளியாக அடையாளப்படுத்தப்பட்ட இவர் தற்போது பிணையிலிருந்த நேரத்திலேயே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலியாகியுள்ளார்.

இவரது மரணமானது போதைப்பொருள் வியாபாரத்தை மையப்படுத்தியே மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுகின்றது.

எவ்வாரெனினும் மேல்மாகாண சிரேஷ்ட காவற்துறை மா அதிபரின் வழிக்காட்டலின் கீழ் குற்றத்தடுப்பு பிரிவு காவற்துறை பிரிவாலும், புறக்கோட்டை காவற்துறை நிலைய பொறுப்பதிகாரியின் கீழான குழுவொன்றும் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

0Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*