கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சுட்டுக்கொலை

கொழும்பு மாநகர சபையின் சுயேட்சைக் குழு உறுப்பினரான கிருஸ்ணா எனப்படும், கிருஸ்ணபிள்ளை கிருபானந்தன் ( வயது-40) இன்று காலை கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

செட்டியார் தெருவில் இன்று காலை 7.45 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

தனது பழக்கடையில் நின்ற போது, உந்துருளிவில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவர் மாநகர சபை உறுப்பினர் கிருஸ்ணா மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

படுகாயமடைந்த அவர் உடனடியாக கொழும்பு தேசிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி உயிழந்தார்.

கொட்டாஞ்சேனையை வதிவிடமாகக் கொண்ட கிருஸ்ணபிள்ளை கிருபானந்தன், நவோதய மக்கள் முன்னணியின் தலைவராக இருக்கிறார்.

கடந்த பெப்ரவரி மாதம் நடந்த உள்ளூராட்சித் தேர்தலில், சுயேட்சைக் குழுவில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, கொழும்பு- கொட்டாஞ்சேனை, ஜெம்பட்டா வீதியில் நேற்று முன்னிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். இருவர் காயமடைந்தனர்.

செல்லையா செல்வராஜ் (வயது-58), எலிசபெத் பெரேரா( வயது 50) ஆகியோரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தனர்.

66Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*