வாகனங்களை வைத்திருக்கும் இலங்கை பிரஜைகள் சோகத்தில்

வாகனம் வைத்திருக்கும் ஒவ்வொரு நபரிடமிருந்தும் வருமான வரி அறவிடப்பட வேண்டும் என தேசிய வருமான வரிகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்திருந்த கருத்தை கூட்டு எதிர்க் கட்சி கடுமையாக எதிர்த்துள்ளது.

எமது நாட்டில் ஒருவர் ஒரு வாகனத்தை வாங்குவதற்கு குறைந்தது 10 வருடங்கள் கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும். அப்படி எடுக்கும் ஒரு வாகனத்தையும் ஒரு வாரத்துக்கு ஒரு தடவை அல்லது இரு தடவைதான் வெளியே எடுக்கின்றோம். நாட்டில் அதிகரித்துள்ள எரிபொருள் விலையை அவனால் சுமக்க முடியாதுள்ளது.

இதுபோன்ற ஒரு நிலைமையில் வரிவிதிப்பு பற்றியும் அறிவிப்புக்களை விடுப்பது எந்தளவு நியாயமானது என சீர்தூக்கிப் பார்க்க வேண்டியுள்ளதாக கூட்டு எதிர்க் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்.

45Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*