22 லட்சம் ரூபாவை ஏப்பமிட்ட முதல்வர் விக்கியின் மறைக்கப்பட்ட உண்மைகள் அம்பலம்

வடக்கு மாகாண முத­லமைச்­சர் சி.வி.விக்னேஸ்வ­ரன் தன்­னுடைய தனிப்­பட்ட உத­வி­யா­ள­ரை­யும் அழைத்­துக் கொண்டு கொழும்புக்­குச் சென்­று­வர கடந்த 4 ஆண்­டு­க­ளில் 22 லட்­சம் ரூபாவை வான் பய­ணங்­க­ளுக்­காக மட்டும் செலவிட்­டுள்­ளார்.

யாழ்ப்­பா­ணத்துக்கும் கொழும்புக்கும் இடை­யில் வானூர்­திச் சேவையை வழங்­கும் ஹெலி ரு­வர்ஸ் நிறுவ­னம் கொழும்பு சென்று யாழ்ப்­­பாணம் திரும்­பு­வ­தற்கு தற்­போது 29 ஆயி­ரம் ரூபாவை இரு­வ­ழிக் கட்­ட­ணமாக அற­வி­டு­கின்­றது.

முத­லமைச்­ச­ரின் தற்­போ­தைய ஒவ்வொரு பய­ணத்­தின் ­போ­தும் அவ­ரது தனிப்­பட்ட உத­வியா­ள ­ருக்­கும் சேர்த்து 58ஆயி ரம் ரூபா மாகாண சபை நிதி யில் இருந்து செலுத்­தப்­பட்­டுள்ளது.

கொழும்­புக்­குச் சென்­று­வ­ரு­வதற்கு வானூர்­தி­யைப் பயன்­ப டுத்து­வ­தற்­கான அனு­ம­தியை வடக்கு மாகாண ஆளு­ந­ராக மேஜர் ஜென­ரல் ஜி.ஏ.சந்­தி­ர­சிறி இருந்­த­ போது முத­ல­மைச்­சர் பெற்­றுக் கொண்­டி­ருந்­தார்.

அத­ன­டிப்படை­ யி­லேயே அவர் தனது வானூர்­திப் பய ­ணங்­களை மேற்­கொள்­கி­றார். வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் பத­வியேற்ற தொடக்­கத்­தில் வாகனத்­தி­ லேயே கொழும்­புக்­குச் சென்­று­வந்து கொண்­டி­ருந்­தார்.

அப்­போது வட­மா­காண ஆளு­ந­ராக இருந்­த­வ­ரான மேஜர் ஜென­ரல் ஜீ.ஏ.சந்­தி­ர­சிறி தான் கொழும்­பிற்கு வானூர்தி மூலம் சென்று வரு­வ­த­னால், முத­ல­மைச்­ச­ரும் மாகாண நிதி­யைப் பயன்­ப­டுத்தி வானூர்­திப் போக்­கு­வ­ரத்தை மேற்­கொள்­ள­லாம் என்று அனு­ம­தி வழங்­கி­னார்.

இதை­ய­டுத்து 2014ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை­யான 4 ஆண்­டு­க­ளில் வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் 48 தட­வை­கள் விமா­னம் மூலம் கொழும்­பிற்கு சென்று வந்­துள்­ளார்.

இதற்­காக 22 லட்­சத்து 61 ஆயி­ரம் ரூபா பணம் ஷெலி­ரு­வர்ஸ் நிறு­வத்­திற்­குச் செலுத்­தப்­பட்­டுள்­ளது.

2014ஆம் ஆண்­டில் 11 தட­வை­க­ளும் , 2015ஆம் ஆண்­டில் 13 தட­வை­க­ளும் , 2016ஆம் ஆண்­டில் 15 தட­வை­க­ளும் 2017ஆம் ஆண்­டில் 9 தட­வை­க­ளும் முத­ல­மைச்­சர் கொழும்பு சென்று வந்­துள்­ளார்.

இவ்­வாறு பய­ணித்த 48 தட­வை­க­ளும் தன்­னு­டன் ஓர் உத­வி­யா­ள­ரை­யும் அழைத்­துச் சென்­றுள்­ளார். அவ்­வாறு அழைத்­துச் சென்ற உத­வி­யா­ள­ரின் போக்­கு­வ­ரத்­துக்­கும் மாகாண சபை­யின் நிதியே வழங்­கப்­பட்­டுள்­ளது.

முத­ல­மைச்­சர் வானூர்தி மூலம் சென்­று­வ­ரு­வ­தற்கு ஆளு­நர் வழங்­கிய அனு­ம­தி­யில் அவர் உத­வி­யா­ளர் ஒரு­வரை அழைத்­துச் செல்­வ­தற்­கும் அனு­ம­திக்­கப்­ப­டு­வ­தா­கக் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை.

அவ­ரது பாது­காப்­புக்­கா­கப் பாது­கா­வ­லர் ஒரு­வர் அவ­ரோடு செல்­வது ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டக்­கூ­டி­யதே என்­கி­ற­போ­தும் ஒவ்­வொரு தட­வை­யும் அவர் தனது தனிப்­பட்ட உத­வி­யா­ள­ரையே இவ்­வாறு அழைத்­துச் சென்­றி­ருக்­கி­றார்.

2014 , 2015ஆம் ஆண்­டு­க­ளில் இரு­வ­ழிக் கட்­ட­ண­மாக 35 ஆயி­ரம் ரூபா­வீ­தம் பணம் செலுத்­தப்­பட்ட நிலை­யில் 2016ஆம் ஆண்டு முதல் 58 ஆயி­ரம் ரூபா வீதம் பணம் செலுத்­தப்­ப­டு­கின்­றது.

இலங்­கை­யில் உள்ள 9 மாகா­ணங்­க­ளில் வேறு எந்த மாகாண முத­ல­மைச்­ச­ரிற்­கும் இது­போன்ற சலுகை தற்­போ­து­வ­ரை­யில் வழங்­கப்­ப­டு­வது கிடை­யாது.

58Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*