யாழில் 50 ரூபாவிற்கு முடிவெட்ட சொன்ன வாலிபருக்கு 17 மாத சிறைத்தண்டனை

Loading...

வடமராட்சியில் உள்ள சலூன் ஒன்றில் 50 ரூபாவிற்கு முடிவெட்ட முயன்றவருக்கு 17 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. துன்னாலை கலிகைசந்தி பகுதியலுள்ள சலூனிற்கு சென்று, 50 ரூபா தகராற்றில் ஈடுபட்டதுடன், திருட்டிலும் ஈடுபட்ட வாலிபனிற்கே பருத்தித்துறை நீதிவான் நளினி கந்தசாமி இந்த தீர்ப்பளித்தார்.

கடந்த வருடம் டிசம்பர் மாத முற்பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. கலிகை சந்தியிலுள்ள சலூனிற்கு மதுபோதையில் சென்ற வாலிபன், 50 ரூபாவிற்கு அளவாக தலைமுடி வெட்டுமாறு கூறியுள்ளார். சலூன் உரிமையாளர் அதற்கு மறுப்பு தெரிவிக்கவே, வாலிபர் ரகளையில் ஈடுபட்டார். சலூனிலிருந்த பொருட்களை அடித்துடைத்ததுடன், அங்கிருந்த கைபேசியையும் அபகரித்திருந்தார்.

இது தொடர்பில் சலூன் உரிமையாளர் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறையிட்டிருந்தார். வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

வாலிபரை குற்றவாளியாக இனம்கண்ட நீதிவான், அவருக்கு 6 மாத சிறைத்தண்டனை, 1,500 ரூபா அபராதம் விதித்தார்.

இதேவேளை, இந்த வாலிபருக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றில் இன்னொரு குற்றச்சாட்டில் 6 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட11 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இதனை கவனத்தில் எடுத்த நீதிவான், வாலிபருக்கு 17 மாத சிறைத்தண்டனை விதித்தார். தண்டப்பணம் 1500 ரூபாவை செலுத்த தவறின், மேலும் 1 மாதம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டுமென உத்தரவிட்டார்

0Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*