ராமேஸ்வரத்தில் கண்டுபிடிப்பட்ட ஆயுதங்கள் புலிகளின் ஆயுதங்கள் இல்லையாம்!! ஆனால் தமிழ் இயக்கம் தொடர்பு..

Loading...

தமிழீழ விடுதலைப் இயக்கத்தினால் (ரெலோ) பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ஆயுதக் குவியலொன்று ராமேஸ்வரத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் கிணறு தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது, அங்கிருந்து துப்பாக்கி தோட்டாக்கள், ரொக்கெட் லோஞ்சர், கண்ணிவெடிகள் போன்ற ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், வெடிகுண்டுகளை செயலிழக்க செய்யும் தனிப்படை மற்றும் பொலிஸாரின் பாதுகாப்பு மத்தியில் அப்பகுதியில் அகழ்வுப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறித்த பகுதியிலிருந்து நேற்று இரவுவரை 10 ஆயிரம் துப்பாக்கி தோட்டாங்கள், 400 ரொக்கெட் லோஞ்சர்கள், 15 பெட்டி கையெறி குண்டுகள், 5 கண்ணிவெடிகள், கடல் தண்ணீர் பட்டவுடன் வெடிக்கும் குண்டுகள் என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்ட வண்ணமுள்ள நிலையில், குறித்த பகுதியை அண்மித்த பகுதியிலிருந்து பாதுகாப்பு நோக்கம் கருதி மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், தண்ணீர் ஊற்று, பனைக்குளம், ஆற்றாங்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இந்திய ஆதரவோடு இலங்கையை சேர்ந்த பல்வேறு தமிழ் குழுக்களுக்கு ஆயுத பயிற்சி அளிக்கப்பட்டது.

கடற்கரையை ஒட்டி உள்ள பகுதிகளில் தமிழ் குழுக்கள் பல ஆண்டுகளாக ஆயுத பயிற்சி பெற்றனர்.

இதனை தொடர்ந்து, கடந்த 1986ஆம் ஆண்டு இந்தியாவில் பயிற்சி பெற்ற இலங்கையை சோ்ந்த தமிழ் குழுக்கள் அனைத்தும் வெளியேற்றப்பட்டன.

அக்கால கட்டத்தில் ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளில் பயிற்சி பெற்றவர்கள் தங்கள் பயிற்சியின் போது பயன்படுத்திய ஆயுதங்களை இலங்கைக்கு எடுத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதனைதொடர்ந்து, பயிற்சி அளிக்கப்பட்ட இடங்களில் ஆயுதங்களை புதைத்து விட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு புதைக்கப்பட்ட ஆயுதங்களே தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

38Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*