ஓ.பன்னீர்செல்வத்தை பார்த்து பதுங்கிய நடிகர் விஜய்..!

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வதை பார்த்து நடிகர் விஜய் பதுங்கிய சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

Loading...

அ.தி.மு.க., மீனவரணி மாநில செயலர் நீலாங்கரை முனுசாமி. இவரது மகன் பரத் குமார் திருமணம் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்று இருக்கிறது. திருமணத்தில் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டாலும் முதல் நாள் இரவு நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ஓபிஎஸ்.

ஈஞ்சம்பாக்கம் கோபி கிருஷ்ணா பிருந்தாவனம் கோபிநாத் கார்டனில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ஓ.பி.எஸ் வந்த அதே நேரத்தில் நடிகர் விஜயும் வந்துள்ளார். நீலாங்கரையில் விஜய் குடியிருப்பதால் நடிகர் விஜய்க்கும் முனுசாமி பத்திரிகை கொடுத்திருக்கிறார்.

முனுசாமி இல்ல வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் விஜய்…

திருமண வரவேற்புக்கு விஜய் வந்த நேரம், துணை முதல்வர் பன்னீர் செல்வம், அமைச்சர் ஜெயகுமார் உள்ளிட்ட பலரும் விழாவில் கலந்து கொண்டிருப்பது விஜய்க்கு தெரிய வந்திருக்கிறது. அவர்கள்  மணமக்களை வாழ்த்திவிட்டு கிளம்பும் வரை மண்டபத்துக்கு வெளியே காரை விட்டு விஜய் இறங்கவே இல்லையாம். பிறகு ஓ.பி.எஸ் வகையறாக்கள் கிளம்பிச் சென்ற பின்னர் சென்று மணமக்களை வாழ்த்திவிட்டு வந்திருக்கிறார். 

விஜய் இப்படி பதுங்கி காத்திருந்ததற்கு காரணம் இல்லாமல் இல்லை. அ.தி.மு.க-வினர் உள்ளே இருக்கும் போது தானும் உள்ளே சென்றால் அவர்களுடன் சேர்ந்து, போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் நிலை ஏற்படும். அதை தவிர்க்க  காரில் பதுங்கி இருந்தாராம் விஜய்.   

[embedyt]https://youtu.be/3E7hSzCLdD8[/embedyt]

21Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*