வெள்ளைக்கொடியுடன் சரணாகி காணாமல் போன விடுதலைப்புலி உறுப்பினர்கள் பட்டியல் ஒருபகுதி வெளியாகியுள்ளது..

விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் உள்ளிட்ட காணாமல்போன மற்றும் காணாமல் ஆக்கப்பட்டதாக கருதப்படும் நபர்களின் பெயர்பட்டியல் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. 2009ம் ஆண்டு முதல் இலங்கையில் இடம்பெற்ற யுத்த காலப்பகுதியில் காணாமல் போன மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களாக கருதப்படும் நபர்கள் தொடர்பான விடயங்கள் இவ்வாறு வெளியாகியுள்ளன.

இது குறித்த விபரங்கள் சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்திற்கமைய இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. 351 நபர்களது பெயர் மற்றும் விபரங்கள் இந்த இணையத்தளத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த பட்டியலிடப்பட்ட நபர்கள் பற்றிய தகவல்கள் தெரிந்திருப்பின் காணாமல்போனோர் அலுவலகத்துடன் தொடர்புகொள்ளுமாறும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

பெயர்ப்பட்டியலை பார்வையிட இங்கே அழுத்தவும்

165Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*