இனியும் என்னால் உயிருடன் இருக்க முடியாது! இலங்கையில் கதறி அழும் சாந்தனின் தாயார்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக இருக்கும் சாந்தனுடைய தாயார் மகேஸ்வரி, மகனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு தொடர்பில் தனது கவலையை வெளியிட்டுள்ளார்.

சாந்தன் உள்ளிட்டவர்களுக்கு கடந்த வெள்ளிக்கிழமை வழங்கப்பட்ட தீர்ப்பை கேள்வியுற்று தாம் மயங்கி விழுந்ததாகவும், இனிமேல் தன்னால் இப்படியான அதிர்ச்சியை தாங்கிக் கொள்ள முடியாது எனவும் கண்ணீருடன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இனிமேலும் இப்படியான அதிர்ச்சியான செய்தியை கேள்வியுற்றால் அதை தாங்க முடியாது.

ஆகவே பிள்ளைகளுக்கு தெரியாமல் எனக்கான ஒரு முடிவை நான் எடுத்து வைத்துள்ளேன் என இலங்கையிலிருந்து சாந்தனுடைய தாயார் மகேஸ்வரி கவலையுடனும், கண்ணீருடனும் தெரிவித்துள்ளார்

81Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*