மானுட.. நில்.. எங்கே ஓடுகிறாய்?ஒரு நிமிடம் செலவழித்து இதை முழுமையாக படி!

இது என்னுடைய நான்கு மாத உழைப்பு…. இதனை எடுத்துச்சென்று எனது செல்ல மகளிடம்👸 ஆசையாய் கொடுத்தேன்… இரண்டு வினாடிகள் அதனை உற்றுப்பார்த்த அவள் எனது முகத்தில் விசிரிஎரிந்து விட்டு ஓடிவந்து என்னை கட்டிஅனைத்து😘 முத்தமிட்டு சிரித்தாள்… என் இதயம் வெடித்தே💔 விட்டது.. அப்பொழுதுதான் என் அறைவேக்காட்டு அறிவிக்கு உறைத்தது அந்த பிச்சுக்கு தேவை இந்த💵வெற்றுக்காகிதங்கள் அல்ல… விலையில்லா தனது தந்தையின் அன்பே என்று 😭….

மானுட.. நில் 🏃‍♂..

எங்கே ஓடுகிறாய்….

விலையில்லா உன் செல்வங்களை வீட்டு சிறையிலும் பள்ளி விடுதி சிறையிலும் அடைத்து அவர்களின் எண்ணங்களை குழிதோண்டி புதைத்து விட்டு நீ எங்கே ஓடுகிறாய்…. பின்பு அறுபதுகளில் பிள்ளைகளிடம் இருந்து அன்பை எதிர்நோக்கின் எப்படி வரும், விதைக்காமலே விளையும் என நினைக்கும் உன்னைப்போல் மடையனும் உண்டோ…🤦‍♀

கடைசியாக உன் மனைவியை எப்பொழுது கட்டிஅனைத்து முத்தமிட்டாய்….

நினைவுன்டா….

ஆம் என்றால் நீ பாக்கியசாலி ,

இல்லை என்றால் நீ இந்த பூவுலகின் பாரம் மட்டுமே … ஒரு பயனும் இல்லை உன்னால்…

நிலையில்லா இந்த வாழ்க்கையிலே சொந்த பந்தங்களை மறந்து நிலையான செல்வத்தை தேடி ஓடும் உன் அறிவைக்கண்டு வியந்துதான் காகம் கூட உன்மேல் கழித்துவிட்டு செல்கிறது….

ஆரோக்கியம் இருக்கும் போது செல்வத்தையும், செல்வம் வந்தபின் ஆரோக்கியத்தையும் தேடியலையும் உன் ஏழாம் அறிவைக்கண்டு வியந்துதான் வானமே மழை பொழியக்கூட மறந்து விட்டது போலும்…

மறதி என்பது மானுடற்கொரு மாமருந்து…. ஆனால் எதற்க்காக பிறந்தோம் என்பதையே மறந்து திரியும் உன்னை என்னவென்று சொல்வது… 😵

வாழ்க்கை என்பது ஒரு முடிவிளி சுழற்ச்சி, அதை ஓடிக்கடக்க நினைப்பது மடமை… அதன் வேகத்திலேயை சென்று வாழ்வை ரசிப்பதே அறுமை…😝😜

பின் குறிப்பு…

55Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*